இதழ் - 166 இதழ் - ௧௬௬
நாள் : 20 - 07 - 2025 நாள் : ௨௦ - ௦௭ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 167
' எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில் '
விளக்கம்
ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கும் புலியைத் துயில் எழுப்பினால், அவனே அழிய நேரிடும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செயினும்
நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா
என்செய்து அகப்பட்டக் கண்ணும் 'எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில்'.
சினம் கொண்ட அரசன் ஒருவன், பகைவனுக்கு வேண்டாத செயல் செய்திருப்பினும் அதைப் பெரிதுபடுத்தாமல் விடல் வேண்டும். அதைவிடுத்து அத்தவற்றை மேலிட்டுக் காண்பித்தால் அரசனின் கோபம் அதிகரிக்குமே தவிர குறையாது.
இச்செயல் துயில் கொண்டிருக்கும் புலியை எழுப்பும் செயல் போன்றதாகும். இதனால் பகைவனுக்கே அழிவு ஏற்படும் என்பதைக் குறிக்கவே 'எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment