” புல் தடுக்கி விழுந்த பயில்வான் போல“
விளக்கம்
பலரையும் வெற்றிகொள்ளும் திறமைகொண்ட பயில்வான் ஒருவன் நடந்து செல்லும் போது சிறிய புல் தாவரம் தடுக்கி கீழே விழுந்து விட்டான் என்று நாம் இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக்கொள்கிறோம்.
” புல் தடுக்கி விழுந்த பயில்வான் போல“
உண்மை விளக்கம்
பழங்கால இந்தியாவில் சந்திரகுப்தர் என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவரின் அவைக் களப்புலவராக, அர்த்தசாஸ்திரம் என்னும் நூலை எழுதிய கௌடில்யர் (சாணக்கியர்) இருந்தார்.
ஒருமுறை கௌடில்யர் நடந்து செல்லும் போது சிறிய புல் காலில் சிக்கி விழுந்து விட்டார். உடனே அந்தப்புல்லை வேரோடு பிடுங்கி எரித்து நீரில் கரைத்து குடித்து விட்டார். இதன் காரணம் கேட்ட மன்னரிடம் கௌடில்யர், ”மன்னா! நம்மை எதிர்க்கும் எதிரிகள் மிகச் சிறியவர்களாக இருப்பினும் அவர்களை வளரவிடாமல் வேரோடு களைந்து விட வேண்டும்” என்று மன்னருக்கு உரைத்தார். இதனை மன்னருக்கு உணர்த்தவே, “புல் தடுக்கி விழுந்த பயில்வான் போல“ என்ற இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment