இதழ் - 81 இதழ் - ௮௧
நாள் : 12-11-2023 நாள் : ௧௨-௧௧-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழ்நாட்டுத் தமிழில் கலந்துள்ள பாலி மொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
போதிமரம் | அரசமரம் |
பாடசாலை | பள்ளிக்கூடம் |
விகாரை | பௌத்தப் பிக்குகள் வசிக்கும் கட்டடம் |
சீலம் | ஒழுக்கம் |
த(தா)ம்பூலம் | வெற்றிலை |
- போதிமரம் பௌத்தர்களினால் வணங்கப்படும் மரமாகும்.
- அரசமரம் பௌத்தர்களினால் வணங்கப்படும் மரமாகும்.
- பாடசாலைக் கல்வி மிகவும் பயனுடையது.
- பள்ளிக்கூடக் கல்வி மிகவும் பயனுள்ளது.
- விகாரைக்குச் சென்று உள்ளீர்களா?
- பௌத்தப்பிக்குகள் வசிக்கும் கட்டடத்திற்குச் சென்று உள்ளீர்களா?
- சீலம் உயிரிலும் ஓம்பப்படும்.
- ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.
- தாம்பூலம் போடும் பழக்கம் உள்ளதா?
- வெற்றிலை போடும் பழக்கம் உள்ளதா?
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020.
No comments:
Post a Comment