பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 32                                                               இதழ் -
நாள் : 04-12-2022                                                  நாள் : 0 - - ௨௦௨௨
 
 
 
திசைச்சொல்
 
திசைச்சொல்
     வேறு திசையிலிருந்து தமிழில் பலகாரணங்களால் வந்து வழங்குஞ் சொல் திசைச்சொல் எனப்படும். திசைச்சொற்கள் பிறநாடுகளிலிருந்து தமிழில் வந்து வழங்குபவை.

     செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும்
     ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
     தம்குறிப்பினவே திசைச்சொல் என்ப
                             - நன்னூல் நூற்பா. எண். 273


பொருள்
     செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த 12 பகுதிகளிலிருந்தும் 18 மொழி பேசும் நாடுகளில் தமிழ்மொழி பேசும் பகுதி அல்லாத பிற 17 நிலங்களில் உள்ள மொழிகளில் இருந்தும் தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.

சான்று
     ஆங்கிலம்   -  பஸ், ஆபீஸ்,  பேனா
     பாரசீகம்    -  பட்டா, தயார்,  சுமார்
     தெலுங்கு    -  வாடகை, எச்சரிக்கை, பண்டிகை

 
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment