பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 105                                                                                         இதழ் - 0
நாள் : 28-04-2024                                                                        நாள் : -0-௨௦௨



தமிழ்ச்சொல் தெளிவோம்


தமிழமுத வாசகர்களுக்கு வணக்கம்!

    ஏறத்தாழ நூறு தமிழமுத இதழ்களில் பிற மொழிகளில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்கள்  எவை என்பதனை அறிந்து தெளிந்தோம்.

    இந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, மராத்தி, வடமொழி போன்றவற்றிலும் ஐரோப்பிய மொழிகளான போர்த்துக்கீசம், ஒல்லாந்து, (டச்சு) பிரெஞ்சு போன்றவற்றிலும் ஆங்கில மொழியிலும் அரபி மொழியிலும் சிங்கள மொழியிலும் தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளமையை அறிந்து கொண்டோம்.

    கொரியன் மொழியில் கிட்டத்தட்ட ஏறத்தாழ நாலாயிரம் தமிழ்ச் சொற்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.

    உலகின் பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றான செம்மொழியான தமிழ் மொழி சமுத்திரம் போன்றது. தேடத் தேட நிட்சயம் தமிழ்ச் சொற்களைக் கண்டறியலாம்.

    நம்மால் இயன்ற அளவு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த முயல்வோம்.

    ஔவையின்  "கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு" என்ற  மொழியுடன்  "தமிழ்ச்சொல்  தெளிவோம்" என்ற பகுதியை நிறைவு செய்கின்றேன்.

மீண்டும் வேறொரு தலைப்பில் ஒன்றிணைவோம்.

நன்றி! 
வணக்கம்!
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment