பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 118                                                                                         இதழ் - ௧௧
நாள் : 27- 07 - 2024                                                                      நாள் :  - 0 - ௨௦௨௪



பழமொழி – 118


           ” உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவார் இல் “

விளக்கம்

அன்பின் தகுதியை அறிந்த பின்னரே தம் இரகசியத்தை ஒருவரிடம் சொல்லலாம் அவாின் தகுதியை அறியாமல் எத்தகைய இரகசியத்தையும் சொல்லக்கூடாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.


உண்மை விளக்கம்

     அன்பறிந்த பின்அல்லால் யார்யார்க்கும் தம்மறையே
     முன்பிறர்க்(கு) ஓடி மொழியற்க - தின்குறுவான்
     கொல்வாங்குக் கொன்றபின் அல்லது 'உயக் கொண்டு
     புல்வாய் வழிப்படுவார் இல்'.

ஒருவன், மான் கன்று ஒன்றினை வேட்டையாடி, அதன் மாமிசத்தைத் தின்பதற்குத் திட்டமிடுகிறான். அவ்வாறு திட்டமிட்ட அவன், அதைவிடுத்து மான் தப்பிச் சென்றவுடன் அதன் மாமிசத்தை தின்ன நினைப்பது பயனற்ற செயலாகும்.      

அதுபோலவே, ஒருவர் மற்றொருவரிடம் அவரின் நட்பின் ஆழத்தை அறிந்த பின்னரே தம்மிடமுள்ள இரகசியத்தை அவரிடம் சொல்ல வேண்டும் அதைவிடுத்து அவரின் நட்பின் தகுதியை அறியாமல் இரகசியத்தைச் சொல்லிவிட்டால் அதைக் காக்க முடியாது என்பதை விளக்கவே 'உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவார் இல்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.


    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment