இதழ் - 182 இதழ் - ௧௮௨
நாள் : 16 - 11 - 2025 நாள் : ௧௬ - ௧௧ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
முல்லை வளம்
முல்லை நிலத்தின் அழகிய பூக்களைக் கொண்ட முல்லைக் கொடிகள் செழித்துத் தழைத்து நறுமலர் ஈன்ற பதிகளுள் ஒன்று திருக்கருகாவூர். செம்பொருளாகிய சிவ பெருமான் அம்முல்லை நில வனத்தில் எழுந்தருளிய கோலத்தை,
"கடிகொள் முல்லை கமழும் கருகா வூர்எம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே"
என்று திருஞானசம்பந்தர் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
இன்றும் அத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் முல்லை வனநாதர் என்றே அழைக்கப்படுகின்றார்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment