இதழ் - 186 இதழ் - ௧௮௬
நாள் : 28 - 12 - 2025 நாள் : ௨௮ - ௧௨ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
திருக்கயிலாயமலை
விண்ணளாவி நிற்கும் இமயமலையில் வெள்ளியங்கிரியாக விளங்குவது
திருக்கயிலாயம். ஈசனார் வீற்றிருக்கும் மலைகளுள் ஒரு மாமலையாய் இலங்கும்
திருமாமலை அதுவே. கயிலாயம் இருக்கும் திசை நோக்கிப் பாடப்பட்ட தேவாரப்பதிகங்கள்
பலவாகும்.
"கங்கையொடு பொங்குசடை எங்கள் இறை தங்கு கயிலாயமலையே" என்று ஆனந்தக்
களிப்பிலே பாடினார் திருஞானசம்பந்தர்.
"கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி, கயிலை மலையானே போற்றி போற்றி" என்று
உளங் கனிந்து பாடினார் திருநாவுக்கரசர்.
"ஊழிதோறூழி முற்றும் உயர் பொன்மலை" என்று அதன் அழியாத் தன்மையை
அறிவித்தார் சுந்தரர்.
இத்தகைய செம்மை சான்ற கயிலாச மலையின் இயற்கைக் கோலத்தையே
தென்னாட்டுத் திருக்கோயில்கள் சுருக்கிக் காட்டும் எனலாம்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment