இதழ் - 172 இதழ் - ௧௭௨
நாள் : 31 - 08 - 2025 நாள் : ௩௧- ௦௮ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
கோடன்
கோடன் என்னும் பெயரும் ஊர்ப் பெயராக வழங்குவதுண்டு. சென்னைக்கு அணித்தாக உள்ள கோடம்பாக்கம் கோடன்பாக்கமே. நெல்லை நாட்டில் முன்னாளில் கோடனூர் என்று வழங்கிய ஊர் இந் நாளில் கோடக நல்லூர் எனப்படுகின்றது.
டோனா
இன்னும் பிற நாட்டுப் பெருமக்கள் பெயரும் தமிழ் நாட்டில் சில ஊர்களுக்கு அமைந்துள்ளன. நெல்லை நாட்டில் டோனாவூர் என்னும் சிற்றூர் இந்நாளில் சிறந்து விளங்குகின்றது. அவ்வூரின் பழம் பெயர் புலியூர்க் குறிஞ்சி என்பதாகும். கிருத்தவ சமயம் நெல்லை நாட்டில் பரவத் தலைப்பட்டபோது கிறித்தவரானவா்கள் குடியிருந்து வாழ்வதற்காக அக்குறிச்சியிலுள்ள மனைகளையும் நிலங்களையும் விலை கொடுத்து வாங்கினர் கிறித்தவ சங்கத்தார். அக்கிரயத் தொகையை செர்மனி நாட்டைச் சார்ந்த டோனா என்னும் பெருஞ்செல்வா் நன்கொடையாக அளித்தார். நன்றி மறவாத நெல்லை நாட்டுக் கிறித்தவா் அவர் பெயரை அவ்வூருக்கு அமைத்து டோனாவூர் என வழங்கலாயினர்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment