இதழ் - 151 இதழ் - ௧௫௧
நாள் : 30 - 03 - 2025 நாள் : ௩௦ - ௦௩ - ௨௦௨௫
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
விளக்கம்
- ஒரு சொய்யுளில் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கைப்போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் அது ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆகும்.
“மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்றற்று ஒழுகும் அஃதுயாற்றுப் புனலே” (நன்னூல், நூற்பா. எ. 412)
சான்று
“சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே”
இந்தப்பாட்டடில், சொல் என்னும் எழுவாயைத் தொடர்ந்து, அதன் பல்வேறு செயல்கள், கருவிருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என எச்சங்களாக இடம்பெற, காய்த்த என்னும் வினைப் பயனிலையை இறுதியில் பெற்று முற்றுப் பெற்றது.
இப்பாட்டில் எச்சொல்லையும் இடம்மாற்றியோ வேறுவகையில் முன்பின்னாகக் கொண்டோ பொருள் கொள்ளாமல், சொற்கள் அமைந்துள்ள நிலையிலேயே பொருள் கொண்டுள்ளமையைக் காணலாம்.
இவ்வாறு இப்பாடலில் சொல்லும், அவற்றின் பொருளும் ஆற்றுநீர் போல் தொடர்ச்சியாகச் செல்வதால் இப்பாடல் ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆயிற்று.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment