பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 81                                                                                                  இதழ் - 
நாள் : 12-11-2023                                                                                    நாள் : --௨௦௨௩

 
 
நாகர்

    பழந் தமிழ்நாட்டில் பல வகுப்பார் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பல குல மன்னர் ஆட்சி புரிந்தார்கள். அவர்களின் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் பெயரும் பெருமையும் ஊர்ப் பெயர்களால் விளங்கி வருவதைக் காணமுடிகிறது.

    நாகர் என்னும் குடிகள் பழங்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த முக்கிய குடிகளில் ஒன்றாகும். தமிழ் இலக்கியங்களில் நாக நாடு செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்களில் ஒருவர் நாக மங்கையை மணந்து பெற்ற மைந்தனே தொண்டைமான் என்னும் பெயரோடு நாகர் காஞ்சி மாநகரில் அரசாண்டான் என்று பண்டைக் கதை கூறும். 

    அன்றியும், தமிழ் நாட்டில் நிறுவப் பெற்ற தலைச்சங்கத்தில் முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார் சங்கப் புலவருடன் வீற்றிருந்து முத்தமிழை வளர்த்தார் என்று தெரிகின்றது. இன்னும், கடைச்சங்கப் புலவர்களில் நாகன் என்னும் பெயருடையார் சிலர் இருந்தனர். நன்னாகன், இளநாகன், வெண்ணாகன் என்னும் மூவரும் பாடிய பாடல்கள் பழந் தொகை நூல்களிற் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டிலுள்ள நாகப்பட்டினம், நாகர்கோவில் முதலிய ஊர்களின் பெயர்களில் நாகர் குடிப்பெயர்களிலிருந்து தோன்றியதை அறியமுடிகிறது.
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment