பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 60                                                                                          இதழ் - 0
நாள் : 18-06-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
 
  
 
பழமொழி – 60   
” இல்லுள்வில் லேற்றி இடைக்கலத்து எய்து விடல் “
 
விளக்கம்
     துணிவில்லா ஒருவன் தன்  இல்லத்தின் உள்ளேயே இருந்து கொண்டு, தன் வில்லைத் தானே வளைத்து நாண் ஏற்றி, எதிாில் உள்ள பானை மீது எய்து தன் வீரத்தைக் காட்டுவான் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
 
    நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
    புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார்
    புடைத்தறுகண் அஞ்சுவான் 'இல்லுள்வில் லேற்றி
    இடைக்கலத்து எய்து விடல்'.
 
இங்கு இடைக்கலம் என்றால் கருங்கலம், புல்லார் என்றால் பகைவர் என்றும் பொருள்.

    கல்வியறிவற்ற ஒருவன் நல்ல கல்வியறிவு உடையவர்கள் அவையில் எவ்வாறு பேசவேண்டும் என்றறியாத அவன் அச்சத்தில்  தன்னைப்பற்றிப் புகழ்ந்தும் அச்சத்தில் பயந்தும் கொள்வான். இத்தகைய செயல், பகைவருக்கு அஞ்சிய போர்வீரன்,  தன்  இல்லத்தின் உள்ளேயே இருந்து கொண்டு, தன் வில்லைத் தானே வளைத்து நாண் ஏற்றி, எதிரில் உள்ள பானை மீது எய்து தன் வீரத்தைக் காட்டுவான் என்பதையே 'இல்லுள்வில் லேற்றி இடைக்கலத்து எய்து விடல்' என்ற இப்பழமொழி  பொருள் உணர்த்துகிறது.



    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment