இதழ் - 52 இதழ் - ௫௨
நாள் : 23-04-2023 நாள் : ௨௩-0௪-௨௦௨௩ வேற்றுமை உருபுகள்
ஏழாம் வேற்றுமை உருபுகள்
ஏழாம் வேற்றுமையின் உருபு கண் முதலாக இல் ஈறாக 28 ஆகும். இவ்வுருபுகளில் கண் என்பதே ஏழாம் வேற்றுமைப் பொருளை உணர்த்தும் தலையாய உருபாகும். எனவே ஏழாம் வேற்றுமையைக் கண் வேற்றுமை என்றும் அழைப்பர்.
இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்.
சான்று
“மரத்தின் கண் உள்ள பறவை.
பெட்டிக்குள் பணம் இருக்கிறது.
ஏழான் உருபு கண் ஆதியாகும்
பொருள் முதல் ஆறும் ஓரிரு கிழமையின்
இடனாய் நிற்றல் இதன் பொருள் என்ப.” ( நன்னூல் நூற்பா. எண் – 301 )
குறிப்பு
“இல்“ என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு. நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும், இடப்பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை என்றும் கொள்ள வேண்டும்.
எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)
எட்டாம் வேற்றுமைக்கு தனியாக உருபு இல்லை. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம். விளித்தல் என்பதற்கு அழைத்தல் என்று பொருள்.
சான்றாக, ”கந்தா வா” என்று விளிக்கும்போது கந்தன் என்னும் படர்க்கைப்பெயர் முன்னிலைப் பொருளுக்கு உரியது ஆகின்றது.
பெயர்ச்சொற்கள் விளிக்கப்படும் பொழுது பெயரின் இறுதியில் சிலமாறுதல்கள் ஏற்படும். அவை ஈறு திரிதலும், ஈறு குன்றலும், ஈறு மிகுதலும், இயல்பாக வருதலும், ஈற்று அயல் எழுத்துத் திரிதலும் ஆகும்.
“எட்டன் உருபே எய்து பெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
திரிபுமாம் பொருள் படர்க்கை யோரைத்
தன் முகமாகத்தான் அழைப்பதுவே” (நன்னூல் நூற்பா. எண் – 303)
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
திரிபுமாம் பொருள் படர்க்கை யோரைத்
தன் முகமாகத்தான் அழைப்பதுவே” (நன்னூல் நூற்பா. எண் – 303)
இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment