பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 75                                                                                         இதழ் - 
நாள் : 01-10-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩
 
 
 
இடைநிலை
இடைநிலை
  • பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்பு இடைநிலை எனப்படும். 
  • பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலையைப் பெயர் இடைநிலை என்கிறோம்.
 
வகைகள்
    வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலை 
    • பெயர் இடைநிலை
    • எதிர்மறை இடைநிலை
    என இருவகைப்படும்.
 
பெயர்இடைநிலை
  • ஓர் ஆக்கப்பெயர்ச் சொல்லில் பெயர்ப் பகுதியை விகுதியோடு இணைப்பதற்கு வரும் இடைநிலை பெயர் இடைநிலை ஆகும். 
  • ச், ஞ், ந், த், வ் ஆகிய மெய்கள் பெயர் இடைநிலைகளாக வரும்.
 சான்று
  • தமிழச்சி     -    தமிழ் + அ + ச் + ச் + இ
  • இளைஞர்   -   இளை + ஞ் + அர்
  • ஓட்டுநர்     -    ஓட்டு + ந் + அர்
  • ஒருத்தி     -    ஒரு + த் + த் + இ
  • மூவர்       -    மூன்று + வ் + அர்
 எதிர்மறை இடைநிலை
  • எதிர்மறை வினைச் சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்தும் இடைநிலை எதிர்மறை இடைநிலை ஆகும்.
     
  • ஆ என்னும் எதிர்மறை இடைநிலைக்கு அடுத்து உயிர்மெய் வரின் கெடாமல் வரும் உயிரெழுத்து வரின் தன் பொருளை நிறுவிக் கெட்டு வரும். 
  • எதிர்மறை இடைநிலைகள் ஆ, அல், இல் ஆகும்.
 சான்று
  • ஓடாது      -   ஓடு + ஆ + து
  • காணலன்  -   காண் + அல்  + அன் 
  • எழுதிலன்  -   எழுது + இல் + அன்
 
     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment