இதழ் - 161 இதழ் - ௧௬௧
நாள் : 15 - 06 - 2025 நாள் : ௧௫ - ௦௬ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
புலவரும் ஊர்ப்பெயரும்
கிடங்கில் புலவர்
முற்காலத்தில் சிறப்புற்றிருந்த கிடங்கில் என்ற ஊரில் காவிதிப் பட்டமும் குலபதிப் பட்டமும் பெற்ற புலவர்கள் வாழ்ந்திருந்தனர். காவிதிக் கீரங்கண்ணனார், நாவிதிப் பெருங்கொற்றனார், குலபதி நக்கண்ணனார் என்னும் மூவரும் கிடங்கில் பதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாடிய பாட்டு நற்றிணையிலும், குறுந்தொகையிலும் காணப்படுகின்றன. இப்பொழுது திண்டிவனம் என வழங்கும் ஊரின் ஒரு பாகத்தில் கிடங்கால் என்னும் பெயரோடு அமைந்துள்ள இடமே அவ்வூர் ஆகும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment