இதழ் - 22 இதழ் - ௨௨
நாள் : 25-09-2022 நாள் : ௨௫-௦௯- ௨௦௨௨
நாள் : 25-09-2022 நாள் : ௨௫-௦௯- ௨௦௨௨
வினாவெழுத்துகள்
வினாப்பொருளைத் தரும் எழுத்துகள் வினாவெழுத்துகள் எனப்படும். இவை சொற்களின் முதலிலும் இறுதியிலும் வரும்.
வினா எழுத்துகள் (5)
ஆ , எ , ஏ , ஓ , யா
ஆ , எ , ஏ , ஓ , யா
சொல்லின் முதலில் வந்து வினாப்பொருளைத் தரும் எழுத்துகள் - எ, யா
சான்று
எது?, எவ்வகை ?, எவற்றை?, யாவை?, யாது?
எது?, எவ்வகை ?, எவற்றை?, யாவை?, யாது?
சொல்லின் இறுதியில் வந்து வினாப்பொருளைத் தரும் எழுத்துகள் - ஆ, ஓ
சான்று
அவளா, அவனோ, எழுதலாமா
சான்று
அவளா, அவனோ, எழுதலாமா
சொல்லின் முதலிலும் இறுதியிலும் வந்து வினாப்பொருளைத் தரும் எழுத்து - ஏ
சான்று
ஏன், ஏது, அவனே செய்தான், நீதானே வந்தாய்
சான்று
ஏன், ஏது, அவனே செய்தான், நீதானே வந்தாய்
வினாவெழுத்து இரண்டு வகைப்படும்.
- அகவினா
- புறவினா
1. அகவினா
சொல்லில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் தனிச்சொல்லாக நின்று பொருள் தராது. இவ்வாறு சொல்லின் அகத்தே நின்று வினாப்பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
சான்று
எது?, யாது?, யார்?, எது?
எது?, யாது?, யார்?, எது?
2. புறவினா
சொல்லில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் தனிச்சொல்லாக நின்று பொருள் தரும். இவ்வாறு சொல்லின் புறத்தே நின்று வினாப்பொருளைத் தருவது புறவினா எனப்படும்.
சான்று
எப்பையன்? – எ + பையன்
சென்றானா? - சென்றான் + ஆ
சென்றானா? - சென்றான் + ஆ
“எ, யா முதலும் ஆ, ஓ வீற்றும்
ஏ யிருவழியும் வினா வாகும்மே”
ஏ யிருவழியும் வினா வாகும்மே”
- நன்னூல், நூற்பா. எண். 67
( தொடர்ந்து கற்போம் . . . )
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment