பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 198                                                                                   இதழ் - ௧௯௮
நாள்  :  19 / 04 / 2026                                                               நாள்   :  ௧௯ / 0௪ / ௨௦௨௬


இலக்கணம் கற்போம்
 
பாடாண்படலம்

பாடாண்படலம்

23. ஆள்வினை வேள்வி
அரசன் இல்லறம் நடத்தும் பாங்கைச் சிறப்பித்துக் கூறுவது.
24. பாணாற்றுப்படை
ஒரு பாணன் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துவது.
25. கூத்தராற்றுப்படை
பரிசில் பெற்றுச் செல்லும் ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்துவது.
26. பொருநர் ஆற்றுப்படை
பரிசில் பெற்றுச் செல்லும் ஒரு பொருநன் மற்றொரு பொருநனை ஆற்றுப்படுத்துவது.
27. விறலியாற்றுப்படை
பரிசில் பெற விரும்பும் ஒரு விறலியை ஒரு வள்ளலிடம் ஆற்றுப்படுத்துவது.
28. வாயுறை வாழ்த்து
பின்னர்ப் பலித்துப் பயன் தரும் தன் சொல்வழி நடக்குமாறு கூறுவது.
29. செவியறிவுறூஉ
ஓர் அரசனுக்கு அறிவுரைக் கூறுவது.
30. குடை மங்கலம்
அரசனுடைய குடையினைச் சிறப்பித்துக் கூறுவது.
31. வாள் மங்கலம்
அரசனுடைய வாளைச்சிறப்பித்துக் கூறுவது.
32. மண்ணு மங்கலம்
மன்னன் மங்கல நீராடுதலின் மாண்பினைக் கூறுவது.
33. ஓம்படை
அரசனுக்கு சான்றோர் அறிவுரைக் கூறுதல்.
34. புறநிலை வாழ்த்து
வழிபடு தெய்வம் காக்குமாறு வாழ்த்துவது.
35. கொடிநிலை
அரசனுடையக் கொடியைத் தெய்வக்கொடியோடு ஒப்பிட்டுக் கூறுவது.
36. கந்தழி
திருமாலின் வெற்றியைப் புகழ்ந்து கூறுவது.
37. வள்ளி
மகளிர் முருகனுக்கு வள்ளிக்கூத்தினை ஆடுவது.


இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment