இதழ் - 64 இதழ் - ௬௪
நாள் : 16-07-2023 நாள் : ௧௬-0௭-௨௦௨௩ 
தமிழ்ச்சொல் தெளிவோம்
|
தமிழ் சொற்கள் |
அஞ்சனம் |
மை, கறுப்பு |
அஞ்ஞாதவாசம் | மறைந்துறைதல் |
அதிதி | விருந்தினர் |
அத்தியாயம் | படலம் |
பிரசவம் | பிள்ளைப்பேறு, கருவுயிர்ப்பு |
- கண்ணுக்கு அஞ்சனம் இடுவது அழகுக்கு மட்டுமல்ல குளிர்மைக்கும் தான்.
- கண்ணுக்கு மை இடுவது அழகுக்கு மட்டுமல்ல குளிர்மைக்கும் தான்.
- பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் அஞ்ஞாதவாசம் இருந்தனர்.
- பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் மறைந்துறைந்தனர்.
- அதிதியாக வருபவரைச் சிறப்பாகக் கவனிக்க வேண்டும்.
- விருந்தினராக வருபவரைச் சிறப்பாகக் கவனிக்க வேண்டும்.
- கதை இந்த அத்தியாயத்தில் விறுவிறுப்பாக இருக்கிறது.
- கதை இந்தப் படலத்தில் விறுவிறுப்பாக இருக்கிறது.
- பிரசவம் என்பது பெண்ணுக்கு மறுபிறப்பு என்பார்கள்.
- பிள்ளைப்பேறு என்பது பெண்ணுக்கு மறுபிறப்பு என்பார்கள்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை
No comments:
Post a Comment