பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 48                                                                                       இதழ் -
நாள் : 26-03-2023                                                                        நாள் : -0-௨௦௨௩
 
 
       

 

பழமொழி–48

”இடைநாயிற்(று) என்பிடு மாறு“
விளக்கம்
    என்பு (எலும்பு) பெற்ற நாய், கள்ளர்களுக்குச் சாதகமாவது போலப் பகைவர்க்குத் துணையாக வருவோரும் தன்நிலை மாறி விடுவர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

உண்மை விளக்கம்
     யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
     வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று - கூடப்
     படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே
     'இடைநாயிற்(று) என்பிடு மாறு '

 
     ஒருவனுக்கு இரண்டு பகைவர்கள் இருப்பாராயின் அவருள் ஒருவரை தனக்கு சாதகமாகப் பேசி தன்வயப்படுத்திவிட்டால் அப்பகைவருள் ஒருவரை அழித்தல் எளிதாகும். 
 
    அதாவது குழம்பிய குட்டையில் மீன் பிடித்தல் எவ்வாறு எளியதோ, அதைப்போல சூழ்ச்சியால் வெற்றி கொள்வது எளிதாகும். மேலும் இச்செயல், இடையரின் நாய்க்கு ஆடு திருடும் கள்ளர்கள் எலும்பினை இடும் செயலோடு ஒக்கும் என்பதையே 'இடைநாயிற்(று) என்பிடு மாறு'  என்ற இப்பழமொழி  பொருள் உணர்த்துகிறது.

    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment