பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 67                                                                                           இதழ் -
நாள் : 06-08-2023                                                                           நாள் : 0-0-௨௦௨௩
 
  
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
  

தமிழில் வழங்கப்படும் 

பிற மொழிச்சொற்கள்

தமிழ்ச்சொற்கள்

மூடர்
அறிவிலார்
வைசூரி
அம்மை நோய்
வேதனம்
கூலி
வீரர்
மறவர்
யுகம்
ஊழி
 
 
  • மூடர்களுடன் பேசுவதால் பயனில்லை.
  • அறிவிலாருடன் பேசுவதால் பயனில்லை.

  • கோடை காலத்தில் வைசூரி வருவது இயல்பானது.
  • கோடை காலத்தில் அம்மை நோய்  வருவது இயல்பானது.

  • வேதனத்துக்காக மட்டும் பணி செய்யாதீர்கள்.
  • கூலிக்காக மட்டும் பணி செய்யாதீர்கள்.

  • சங்ககாலத்தில் வீரர்களுக்கு நடுகல் இட்டு வழிபட்டுள்ளனர்.
  • சங்ககாலத்தில் மறவர்களுக்கு நடுகல் இட்டு வழிபட்டுள்ளனர்.

  • யுக முடிவில் உலகம் அழியும் என்பது ஐதீகம்.
  • ஊழி முடிவில் உலகம் அழியும் என்பது ஐதீகம்.

 
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment