பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 65                                                                                          இதழ் -
நாள் : 23-07-2023                                                                           நாள் : ௨௩-0-௨௦௨௩
 
   
 
பழமொழி – 65

” நேற்று வெட்டின கிணற்றிலே
 முந்தாநாள் வந்த முதலை போல “
 
விளக்கம்
“ நேற்று வெட்டின கிணற்றிலே
 முந்தாநாள் வந்த முதலை போல ”

 
    நேற்று வெட்டிய கிணற்றில் அடுத்த நாள் வந்த முதலை போல ஆர்ப்பாட்டம் செய்வதாக நாம் இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
 
உண்மை விளக்கம்
“ நேற்று வெட்டின கிணற்றில்
 முந்தாநாள் வந்த முதலை போல ”

    கிராமத்தில் ஒருவன் தான் சமீபத்தில் தெரிந்து கொண்ட ஒரு செய்தியை நீண்ட நாள் தெரிந்தவன் போல பேசிக்கொண்டிருப்பதை நகைக்கவே “ நேற்று வெட்டின கிணற்றில் முந்தாநாள் வந்த முதலை போல ” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment