பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 100                                                                                                  இதழ் - 00
நாள் : 23-03-2024                                                                                  நாள் : -0-௨௦௨



தமிழ்ச்சொல் தெளிவோம்


    உலக நாடுகள் பலவற்றில் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் மொழியும் இருக்கிறது. ஒவ்வொரு நிலத்திலும் பேசப்படும் தமிழ் மொழி கலந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

     அந்த வகையில் இதுவரையில் நாம் வடமொழி, தெலுங்கு மொழி, கன்னட மொழி, போத்துக்கீச மொழி, ஒல்லாந்த மொழி (டச்சு), அரேபிய மொழி, உருது மொழி போன்ற மொழிகளில் கலந்துள்ள தமிழ் சொற்களைப் பார்த்தோம். இம்முறை ஈழநாட்டில் (இலங்கை) பேசப்படும் சிங்கள மொழியில் கலந்துள்ள தமிழ்ச் சொற்கள் பற்றிப் பார்க்கலாம்.

தமிழில் வழங்கப்படும்

பிறமொழிச் சொற்கள்

தமிழ்ச்சொற்கள்

 ஆதாயம

ஆதாயம்

அம்பலம

அம்பலம்

ஆப்ப

அப்பம்

எதிரிய

எதிரி

இடம

இடம்

 

  • எந்த ஒரு செயலையும் ஆதாயம் (ஆதாயம) இன்றிச் செய்ய மாட்டார்கள்.
  • அம்பலத்தில் (அம்பல) பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • எனக்கு அப்பம் (ஆப்ப) சாப்பிடப் பிடிக்கும்.
  • பல சமயங்களில் நமக்கு நாம்தான் எதிரி (எதிரிய).
  • இந்த இடம் (இடம) நன்றாக இருக்கிறது.


 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment