பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 189                                                                                        இதழ் - ௧
நாள்   : 01 / 02 / 2026                                                                   நாள்   :  0௧ / 0 / ௨௦௨


பழமொழி அறிவோம்

பழமொழி – 188

ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது 
விளக்கம்

    நல்ல அறிவோடு, நெறிகளைக் காட்டும் ஆற்றல் உடையவர்கள் (ஒள்ளியகாட்டாளர்) ஆட்சியாளரைத் திருத்துவது அரிது என்பது இப்பழமொழியின் பொருளாகும். 


உண்மை விளக்கம்

         செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால்
        அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப்
        பிள்ளை களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல்
        'ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது'.

    செவிசாய்க்கும் நல்லரசனைப் பெற்றால், அறிவுடைய அமைச்சர்கள் அல்லது நண்பர்கள் மன்னன் தவறான வழியில் செல்லும்போது, பொய்யுரைத்தோ, மருட்டியோ அல்லது தண்டித்தோ திருத்த வேண்டும். அதாவது தாய் பிள்ளைகளை மருட்டித் திருத்துவது போல் அவரைத் திருத்த வேண்டும் என்பதைக் குறிக்கவே 'ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது. 

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment