இதழ் - 42 இதழ் - ௪௨
நாள் : 12-02-2023 நாள் : ௧௨-0௨-௨௦௨௩பழமொழி–42
ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்
எளியாரை வலியார் வருத்தினால், அவரால் அவரை எதிர்த்து அழிக்க முடியாவிட்டாலும், அவர்கள் கண்ணீரே அவ்வலியாரை அழித்து விடும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்'
ஒருவர் தன் சூழ்நிலையால் எளியவராகவம் வறுமையில் உழல்பவராகவும் இருக்கும் சூழலில் செல்வத்தில் உயர்ந்தோர் அவ்வறியவர்களின் நிலையை அறிந்து உதவிட வேண்டும். அவ்வாறு உதவாமல் அவரைத் துன்பத்தில் தள்ளி அவர் கேட்ட உதவிகளை இன்று செய்கிறேன் என்றும் நாளை செய்கிறேன் என்றும் அலைக்கழித்து வந்தால் அவ்வறியவரின் கண்ணீர் செல்வந்தரை எமனாக நின்று அழிக்கும் என்பதையே 'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது. இதனை “ஊழ்வினை உருத்துந்தூட்டும்” என்ற சிலம்பின் வழியும் உணரலாம்.

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment