பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் : 95                                                                                                இதழ் : 
நாள்   : 18-02-2024                                                                              நாள் :  -0-௨௦௨௪ 


 
பாண்டிய நாட்டு ஊர்ப்பெயர்கள் 
 
        தமிழகத்திலுள்ள தென்னாட்டை ஆட்சி செய்த பாண்டி மன்னர்க்குத் தென்னவன், மாறன், செழியன் முதலிய சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டனர். இவை அனைத்தும் ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. தென்னாட்டிலுள்ள தென்னன்குடி, தென்னன்பட்டி, தென்னவனல்லூர், தென்னவனாடு முதலிய ஊர்கள் தென்னவனோடு தொடர்புடையன என்பது இங்கு நோக்கத்தக்கது. 

 மாறன் என்னும் பெயரை மாறனேரி, மாற மங்கலம், மாறனூத்து முதலிய ஊர்ப்பெயர்களில் வழங்கி வருவதைக் காணலாம். நெல்லை நாட்டிலுள்ள செழியனல்லூர் முதலிய ஊர்களின் பெயர்களில் செழியன் என்னும் சிறப்புப் பெயரில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

பூதப்பாண்டியன்

     பழந்தமிழ் நூல்களில் பூதப்பாண்டியன் என்ற பெயருடைய மன்னனின் பெருமை பேசப்பட்டுள்ளது. ஒல்லையூரில் பகைவரை வென்று புகழ் பெற்ற அம்மன்னனை ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்று நல்லிசைப் புலவர்கள் பாராட்டியுள்ளர். நாஞ்சில் நாடு என்னும் தென் திருவாங்கூர் தேசத்திலுள்ள பூதப்பாண்டி என்ற ஊர் அவன் பெயரால் அமைந்ததென்று கருத இடமுண்டு.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment