பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 54                                                                                           இதழ் -
நாள் : 07-05-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩
   
  
 
பழமொழி – 54
 
” இருதலையும் காக்கழித் தார் “
 
விளக்கம்
 
     ஒருவன் இல்லற வாழ்க்கையானாலும் துறவற வாழ்க்கையானலும் எதாவது ஒன்றின் மீது பற்று கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே அது நிலைக்கும். அவ்வாறு இல்லாமல் இரண்டிலும் பயணித்தால் அவ்வாழ்கை பயனற்றுப்போகும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
 
        இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்
        நல்வாழ்க்கை போக நடுவுனின்(று) - எல்லாம்
        ஒருதலையாச் சென்று துணியா தவரே
 
       'இருதலையும் காக்கழித் தார்'
 
    ஒருவன் இல்லற வாழ்க்கையானலும் துறவு வாழ்க்கையானலும் ஏதாவது ஒன்றில் நிலையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இரண்டு (இல்லறம், துறவறம்) வாழ்விலும் உறுதியாக இல்லாமல் பயணித்தால் வாழ்க்கை வீணாகிவிடும்.
 
    இது காவடித்தண்டின் இரண்டு பக்கத்திலும் உள்ள பொருள்களை நீக்கிவிட்டு வெறும் தண்டினை மட்டுமே சுமந்து சென்றால் எவ்வாறு நகைப்பு உண்டாகுமோ, அதைப்போன்றே இரண்டு வாழ்விலும் உறுதியில்லாத பயணம் மேற்கொள்ளும்போது அவ்வாழ்க்கை பயனற்றுப்போகும் என்பதையே 'இருதலையும் காக்கழித் தார்' என்ற இப்பழமொழி  பொருள் உணரத்துகிறது.
 
    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment