பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 183                                                                        இதழ் - ௧
நாள் :  29 - 11 - 2025                                                      நாள் :    - ௨௦௨


இலக்கணம் கற்போம்
 

வெட்சிப்படலம்

     வெட்சிப்பூவைச் (குறிஞ்சி நிலத்திற்குரியது, சிவந்த நிறத்தை உடையது) சூடிய மறவர்கள் பகைநாட்டில் உள்ள மலையிலும், பிற நிலப்பகுதிகளிலும் மேய்ந்து கொண்டிருக்கின்ற ஆநிரைகளை (பசு) பிறர் அறியாதவாறு கவர்ந்து வருவர்.  இவ் ஒழுக்கத்தை வெட்சித்திணை அல்லது வெட்சிப்படலம் என்பர். இது இருவகையாக நடக்கும் என்கிறார் புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூலின் ஆசிரியர் ஐனாரிதனார்.

1. மன்னுறு தொழில்
    அரசனின் கட்டளையை ஏற்று ஆநிரைகளைக் கவரச் செல்வது.
2. தன்னுறு தொழில்
    அரசனின் ஏவலின்றி மறவர்கள் தானே பகைவர் நாட்டு ஆநிரைகளைக் கவர்தல்.

இலக்கணம் தொடரும் . . .


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment