இதழ் - 56 இதழ் - ௫௬
நாள் : 21-05-2023 நாள் : ௨அ-0௫-௨௦௨௩
பழமொழி – 56
” இருதலைக் கொள்ளியென் பார் “
விளக்கம்
ஒருவன் தன் நண்பர்களிடம் நல்லவர்கள் போல் பேசி, தன் நண்பர்களின் பகைவர்களிடத்தும் நல்லவர்கள் போல் பேசுபவர்கள் “இருதலைக்கொள்ளி” போன்றவர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
'இருதலைக் கொள்ளியென் பார்'.
பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
'இருதலைக் கொள்ளியென் பார்'.
இங்கு “இருதலைக்கொள்ளி” என்பது இரண்டு புறமும் விஷத்தன்மை கொண்ட தலையுள்ள பாம்பைக் குறிக்கும்.
ஒருவன் தன் நண்பர்களிடம் நல்லவர்கள் போல் பேசி, தன் நண்பர்களின் பகைவர்களிடமும் சென்று நல்லவர் போல் பேசி இருவருக்குள்ளும் தீராப் பகையை உருவாக்கும் அந்த நபரிடம், நட்பு கொள்வது இருவருக்கும் கெடுதலே ஆகும்.
அத்தகைய ஒருவன் இரண்டு புறமும் விஷம் கொண்ட இருதலைக்கொள்ளி பாம்பிற்கு இணையானவர்கள் என்பதையே, 'இருதலைக் கொள்ளியென் பார்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment