இதழ் - 160 இதழ் - ௧௬௦
நாள் : 08 - 06 - 2025 நாள் : ௦௮ - ௦௬ - ௨௦௨௫
அளைமறி பாப்புப் பொருள்கோள்
அளை + மறி + பாம்பு என்பது அளைமறி பாப்பு என வந்துள்ளது. அளை என்றால் வளை அல்லது புற்று என்று பொருள். பாப்பு என்பது பாம்பு எனப் பொருள்படும்.
பாம்பு புற்றில் நுழையும்போது, தானே மடங்கி தலை மேலாகவும், வால் கீழாகவும் நிலை மாறுவது போல செய்யுளில் இறுதிச்சொல் அல்லது இறுதியடி கீழ்மேலாய் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளுமாறு அமைவது ‘அளைமறிபாப்புப் பொருள்கோள்’ எனப்படும்.
“செய்யுள் இறுதி மொழியிடை முதலிலும்
எய்திய பொருள்கோள் அளைமறி பாப்பே”
(நன்னூல் நூற்பாஎண். 417)
உதாரணம்
“காண்பார் கண்ணாரக் கடவுளை எப்போதும்
பூண்பார் புனிதத் தவம்“
இப்பாடலில் இறுதியிலுள்ள புனிதத் தவம் என்ற சொல் கீழ் மேலாக புனிதத் தவம் பூண்பார் எப்போதும் கடவுளைக் கண்ணாரக் காண்பார் என இயைந்து பொருள் கொள்ள வரும். இதற்கு ‘அளைமறிபாப்புப் பொருள்கோள்’ என்று பெயர்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment