பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 36                                                                                  இதழ் - ௩௬
நாள் : 01-01-2023                                                                      நாள் : 0 - 0 - ௨௦௨
 
  
 
பழமொழி – 36
 
  ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும் ”
 
      ஒருவன் அன்புடையவர்களாகவோ அன்பற்றவர்களாகவோ விளங்கினால், அத்தகையோரை ஆராய்ந்து நண்பராகக் கொள்ளல் வேண்டும். அவ்வாறு ஆராயவில்லையெனில் அந்நட்பு விரைந்து கெடும் என்பது இப்பழமொழியின் விளக்கமாகும். (இங்கு ‘விளிந்து’ என்றால் – விரைந்து கெடும் என்று பொருள்)

     விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
     முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
     அளிந்தார்கண் ஆயினும் 'ஆராயா னாகித்
     தெளிந்தான் விளிந்து விடும்'.


     ஒருவன் தன்னிடம் அன்பு கொண்டு நட்புடன் விளங்குபவரின் தன்மையை ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும். அவ்வாறு ஆராய்ந்து நட்பு கொள்ளும் போதுதான் நட்புகொள்பவரின் உண்மைத் தன்மை வெளிப்படும். ஆராயாமல் கொள்ளும் நட்பானது தன் தேவை முடிந்த பின் விரைவில் கெட்டு விடும் என்பதையே 'ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்' என்ற இப்பழமொழி பொருள் உணா்த்துகிறது. (இங்கு விளிந்து – விரைந்து கெடும், முளிதல் – காய்தல், தஞ்சம் – எளிமை என்று பொருள்)

      இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment