இதழ் - 108 இதழ் - ௧0௮
நாள் : 19-05-2024 நாள் : ௧௯-0ரு-௨௦௨௪
- நிலை மொழியின் மகர ஈறு வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்து புணரும்.
சான்று
நிலம் + கடந்தான் = நிலங்கடந்தான்
- நில + கடந்தான் - (மகரம் (ம்) கெட்டு )
- நிலங் + கடந்தான் - (வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கு (க) இனமான மெல்லினமாகத்( ங்) திரிந்து )
- நிலங்கடந்தான் எனப் புணர்ந்தது.
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment