பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 190                                                                                                        இதழ் - ௧0
நாள்  :  08 / 02 / 2026                                                                                  நாள்   :   0 / 0 / ௨௦௨


இலக்கணம் கற்போம்
 

நொச்சிப்படலம்

நொச்சிப்படலம் ( நொச்சி – மதிலைக் காப்பது )

    ஓர் அரசன் பகை அரசனின் கோட்டையைக் கைப்பற்றி வளைத்துக் கொள்வான். அப்போது முற்றுகையிடப்பட்ட அரசன் கோட்டைக்குள் இருந்து தன் மதிலைப் பகையரசன் கைப்பற்றாதவாறு நொச்சிப்பூவினைச் சூடிக்கொண்டு போரிடுதல் நொச்சித்திணை எனப்படும்.

நொச்சித்திணை துறைகள் மொத்தம்  –  8

1. மறனுடைப்பாசி: 
உழிஞை மறவர்களுக்குப் புறங்கொடாமல் நொச்சி மறவர்கள் போர் செய்வது.

2. ஊர்ச்செரு:
அரணுக்குப் புறத்தே உள்ள ஊரின்கண் பகைவரோடு நொச்சியார் போர் புரிவது.

3. செருவிடை வீழ்தல்:
பகைவர் உள்ளே நுழைய முடியாதபடி அரணைக் காக்கப் போரிட்டு இறந்த 
     மறவனைப் பாராட்டுவது.

4. குதிரைமறம்: 
குதிரைப் படையின் மறமாண்பினைப் பாராட்டிக் கூறுவது.

5. எயிற்போர்: 
மதிலைக் காத்து நிற்கும் நொச்சி மறவரின் மறமாண்பினைச் சிறப்பித்துக் கூறுவது.

6. எயில்தனை அழித்தல்: 
எயிலைக் காக்கின்ற நொச்சி மறவர்களை பகைவர் வீழ்த்துவது.

7. அழிபடை தாங்கல்: 
பகைவரால் அழிந்துபட்ட காவல் படைக்கு மாறாக பிற மறவர்கள் அக்காவலில் 
    நின்று தடுத்தல்.

8. மகள் மறுத்து மொழிதல்: 
மகளைக் கேட்ட பகையரசனுக்கு நொச்சி வேந்தன் பெண் கொடுக்க மறுப்பது.

இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment