பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம்

இதழ் - 121                                                                                           இதழ் - ௧
நாள் : 18- 08 - 2024                                                                        நாள் :  -  - ௨௦௨௪
 
ஔவை

     இதுவரை நாம் சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட ஔவை பற்றிய  தகவல்களில் ஒரு சிலவற்றைப் பார்த்தோம். ஔவையின் இளமை பொருந்திய தோற்றப் பொலிவினையும் கண்டு களித்தோம்.

     பாரி பெற்ற அங்கவை, சங்கவை என்ற இரண்டு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வித்தவர் ஔவை என்று கூறப்படுவது அனைவரும் அறிந்ததே. இதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

     பாரியின் மேல்  கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாக மூவேந்தர்கள் அவனைப் போரில் கொன்றனர். தனித்து நின்ற அவன் பிள்ளைகள் இருவரையும் பாரியின் நண்பரான கபிலர் (சங்க காலப் புலவர்) பொறுப்பேற்று  மலையமான் எனும் மன்னரின் இரு புதல்வர்களிற்கு மணம் முடித்துவைத்தார். அதன்பின் நண்பன் பாரியின் இழப்பின் துயரத்தால் இறந்தார் என்பது வரலாறு. சான்றாக, “கனல்புகு கபிலக்கல்” என்ற அடியினைக் குறிப்பிடலாம். கபிலக்குன்று என்ற இந்த இடத்தை இன்றும் கல்வெட்டுச் சான்றுடன் காணலாம். இது தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர்  அருகே அமைந்துள்ளது.


கபிலர் குன்று

 வரும் கிழமையும் ஔவை வருவாள்...... 


சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment