இதழ் - 102 இதழ் - ௧0௨
நாள் : 07-04-2024 நாள் : ௩௭-0௪-௨௦௨௪
கிருஷ்ணப்ப நாயக்கன்
பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய நாடு நாயக்கர்களின் ஆட்சியிக்குட்டபட்டது. விஜயநகரப் பேரரசர்களின் சார்பாக, கர்த்தாக்கள் என்னும் பெயரோடு நாயக்கர், மதுரையில் ஆட்சி புரிந்தனர். அவர்களுள் ஒருவன் கிருஷ்ணப்ப நாயக்கன். பாளையங்கோட்டையின் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அவன் பெயரைத் தாங்கி நிற்கின்றது. அங்குள்ள திருமால் கோவிலில் அமைந்துள்ள சிற்பத்தின் சிறப்பு இன்றும் கலைவாணர்களால் வியந்து பாராட்டப்படுவதாகும்.
திருமலை நாயக்கன்
நாயக்கர் மரபைச் சேர்ந்த திருமலை நாயக்கன் பெயரைத் தென்னாடு நன்கு அறியும். மதுரை மாநகரை திருமலை அலங்கரிக்கின்ற கட்டடங்களில் மிகச் சிறந்தது திருமலை நாயக்கன் மாளிகையே யாகும். அவ்வரசன் ஸ்ரீவில்லி புத்தூரிலும் ஒரு சிறந்த அரண்மனை அமைத்தான். அந்த நாயக்கன் பெயரால் அமைந்த ஊர்கள் திருச்சி நாட்டிலுள்ள திருமலை சமுத்திரமும், நெல்லை நாட்டிலுள்ள திருமலை நாயக்கன் படுகையும் ஆகும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment