பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 85                                                                                               இதழ் - 
நாள் : 10-12-2023                                                                                 நாள் : --௨௦௨௩




பழமொழி – 85

” வர வர மாமியார் கழுதை போல் ஆனாளாம் 
 

விளக்கம்

   ஒருவன் ஒரு செயலை முதலில் சரியாகச் செய்து பின் வரும் காலங்களில் அச்செயலை சரியாகச் செய்யவில்லை என்றால் நாம் இப்பழமொழியைப் பயன்படுத்துகிறோம். 


” வர வர மாமியார் கயிதை போல் ஆனாளாம் 
 

உண்மை விளக்கம்

   இங்கு கயிதை என்றால் ஊமத்தங்காயைக் குறிக்கும்.  ஊமத்தம் பூ அழகாக இருக்கும். அப்பூ காயாக மாறும் போது முள்ளாகவும் விஷம் கொண்டதாகவும் தோற்றமளிக்கும். அதைப்போல ஒரு வீட்டில் மாமியார் என்பவர் மருமகளிடம் முதலில் மென்மையாக நடந்து கொண்டாலும் நாட்கள் செல்லச்செல்ல தன் இயல்புநிலை மாறுவதை குறிப்பால் உணர்த்தவே “வர வர மாமியார் கயிதை போல் ஆனாளாம்“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். 


  மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment