இதழ் - 131 இதழ் - ௧௩௧
நாள் : 27- 10 - 2024 நாள் : ௨௭ - ௧௦ - ௨௦௨௪
பழமொழி அறிவோம்
பழமொழி – 131
” அரப்படிச்சவன் அங்காடி போனால்
விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான் ”
விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான் ”
விளக்கம்
அரைகுறையாகப் படித்தவன் தனக்கு அனைத்தும் தெரிந்தவன் போல் அங்காடிகளில் நடந்து கொண்டு எந்தப் பொருளையும் வாங்கவும் மாட்டான், விற்கவும் மாட்டான் என்று நாம் இப்பழமொழிக்கு பொருள் விளங்கிக்கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
இங்கு ”அரப்படிச்சவன்” என்பதை ”அறம் படித்தவன்” (தர்மம், நீதி தெரிந்தவன்) என்று கொள்ள வேண்டும்.
அறவழிப்படி ஒருவன் கல்வி கற்றானாயின் அவன் தவறான பாதையில் செல்லமாட்டான். அத்தகையோன் அங்காடி சென்றால் எந்தப் பொருளையும் வாங்கவும் மாட்டான், விற்கவும் மாட்டான். ஏனெனில் அறத்தின் வழி அங்காடிகளில் வியாபாரம் நடப்பதில்லை. அறத்தின் வழி எதிர்பார்த்தால் அங்கு எதையும் விற்கவும் முடியாது என்பதை உணர்த்தவே “அரப்படிச்சவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment