பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 146                                                                        இதழ் - ௧
நாள் : 23 - 02 - 2025                                                     நாள் :  -  - ௨௦௨



குறுநில மன்னர்  - பூதன்

     புல்வேளூர் என்ற ஊர் பெண்ணையாற்றின் அருகேயுள்ளது. இவ்வூர் தொண்டை நாட்டு எயிற்கோட்டத்தைச் சேர்ந்ததென்று சாசனம் கூறுகிறது. தமிழ் இலக்கியத்திலும் இவ்வூர் இடம் பெற்றுள்ளது. நல்லிசைப் புலவராகிய ஔவையாரை ஆதரித்த பூதன் என்னும் புரவலன் இவ்வூரில் விளங்கினான் என்பது, "பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையும் ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும்" நினைந்து பாடும் ஔவை வாக்கால் அறியலாம். புல்வேளூர் என்பது இப்போது புல்லலூர் எனத் திரிந்து வழங்கப்பட்டு வருகிறது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment