பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 191                                                                                   இதழ் - ௧௯௧
நாள்  :  15 / 02 / 2026                                                             நாள்   :  ௧௫ / 0௨ / ௨௦௨௬



பழமொழி அறிவோம்

பழமொழி – 191

' குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் மாறுமா?' 
விளக்கம்

    குப்பையில் கிடந்தாலும் குன்றின்மணி நிறம் மாறாது என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.

உண்மை விளக்கம்

     இங்கு குன்றின்மணி (Abrus precatorius) என்பது ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் என்ற தாவரத்தின் விதையாகும், இது சிகப்பு மற்றும் கருப்பு நிறங்களில் சிறிய, கடினமான விதைகளைக் கொண்டுள்ளது, மேலும் இது பண்டைய காலத்தில் தங்கம் அளக்கப் பயன்பட்டது. இது சிவப்பு, கருப்பு, வெள்ளை என பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. ஆன்மீக ரீதியாக, இது மகாலட்சுமி மற்றும் அம்பாளின் அம்சமாக கருதப்படுகிறது.

     இத்தகைய குன்றின்மணி குப்பையில் கிடந்தாலும் அதன் தரமும் நிறமும் மாறாது. அதைப்போலவே பண்பில் உயர்ந்த சான்றோர்கள் குப்பையாக நினைத்து புறக்கணிக்கப் பட்டாலும் அவர்களின் தன்மை மற்றும் உயர்ந்த பண்பு மாறாது என்பதைக் குறிக்கவே “குப்பையில் கிடந்தாலும் குன்றின்மணி நிறம் மாறுமா?” என்று இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment