பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

 
இதழ் - 21                                                                   இதழ் -
நாள் : 18-09-2022                                                     நாள் : -௦௯- ௨௦௨௨

   
 
மருத நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
அணை
 
      பழங்காலத்தில் மன்னர்கள் பாய்ந்து ஓடும் ஆற்றுக்குக் குறுக்கே அணை கட்டினர். அணையிலிருந்து கால்வாய் அமைத்து விவசாயத்தை வளப்படுத்தினர். அந்த அணையைச் சுற்றிலும் மக்கள் வசிப்பிடங்களை அமைத்து வாழத் தலைப்பட்டனர். அவ்வாறு தென்னார்காட்டில் கரடியணை, இராமநாதபுரத்தில் கண்ணனை மற்றும் திருச்சிராப்பள்ளியிலுள்ள வெள்ளியணை முதலியவை ஊர்கள் அவ்வாறு தோன்றின.
 
அரங்கம்
 
     ஆற்றின் நடுவே அமைந்து இடைக்குறை வடமொழியில் ரங்கம் என்றும் தமிழில் துருத்தி என்றும் வழங்கப்படும். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் ஸ்ரீரங்கம். இதனை ஆழ்வார்கள் திருவரங்கம் என்று சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன. அதேபோல காவிரியாற்றின் அருகிலுள்ள துருத்தி என்னும் ஊர் திருப்பூந்துருத்தி என்று திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அவ்வாறு துருத்தி என்னும் பெயரிலும் ஊர்ப்பெயர் உருவாகியிருப்பதை அறியமுடிகிறது.

ஆவி
     ஆவி என்பது குளத்தின் பெயராகும். இந்தச் சொல்லிலிருந்து சிறுபான்மையான ஊர்கள் உருவாகியுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் நீராவி என்ற ஊரும், சேலம் மாவட்டத்தில் கல்லாவியும், மதுரையில் கோடல்வாவி ஊர்களும் ஆவி பெயருடன் தொடர்புடைய ஊர்களாகும்.

இலஞ்சி
 
 
     இலஞ்சி என்னும் சொல் ஏரியைக் குறிக்கும். தென்காசிக்கு அருகில் இலஞ்சி என்னும் ஊர் அமைந்துள்ளது. பயிர்த் தொழிலுக்கு ஏற்ற குளத்தின் பெயரிலேயே இலஞ்சி என்னும் ஊர் குறிக்கப்படுகிறது.

 
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment