இதழ் - 137 இதழ் - ௧௩௭
நாள் : 08 - 12 - 2024 நாள் : ௦௮ - ௧௨ - ௨௦௨௪
ஔவை ( கி.பி. 12 )
தற்காலத்தில் கோவில் வழிபாடு தாய் மொழியிலா அல்லது வழக்கத்தில் இருக்கும் பிற மொழியிலா என்ற கருத்து வேறுபாடு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்குப் பதில் கூறுகிறார் ஔவை.
“ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை எம்மறைக்கும் சேட்பொருளைத் தண்குருகூர்ச்
சேய்மொழிய தென்பர் சிலரியான் இவ்வுலகில்
தாய்மொழிய தென்பேன் தகைந்து”.
இந்தப் பாடல் மூலம், அன்றே இப்பிரச்சனைக்குத் தீர்வு சொல்லியிருக்கிறார். அதாவது, ஐம்பூதங்களும், நால்வகைப்பொருள்களும், மூவகை மெய்ப்பொருள்களும் தண் குருகூரின்கண் கோயில் கொண்டிருக்கும் இறைவனால் ஆனது. இறைவன் எந்த வேதங்களாலும் அறியப்படாதவன். அவற்றைக் கடந்தும் நிற்பவன். அவனை வழிபடும் வேதமொழி அந்நியமொழி என்பார்கள். எனினும், இவ்வுலகில் அவரவரின் தாய்மொழியே வழிபாட்டிற்கு உகந்தது என்பதனை நான் வலியுறுத்திச் சொல்வேன்' என்பது பொருள்.
தண்குருகூர் என்பது தற்போதைய ஆழ்வார்திருநகரி ஆகும்.
இறை வழிபாட்டை வைத்து, அவரவர் தாய்மொழியின் சிறப்பை எடுத்துக் கூறிய ஔவை சிறப்புக்குரியவரே.
( வரும் கிழமையும் ஔவை வருவார் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment