பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 184                                                                       இதழ் - ௧
நாள் :  07 - 12 - 2025                                                     நாள் :    - ௨௦௨

 


சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


திருமுதுகுன்றம்

சிவபெருமான் வீற்றிருக்கும் மலைகளுள் ஒன்றாகப் பேசப் பெற்றுள்ள முதுகுன்றம், மணிமுத்தாற்றின் அருகே அமைந்துள்ளது. "முத்தாறு வலஞ் செய்யும் முதுகுன்றம்" என்று திருஞானசம்பந்தர் புகழ்ந்துரைத்த தலம் அதுவே. பண்டைக்காலத்தில் அவ்வூரில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பழமலை இன்று காணப்படவில்லை. எனினும், அத்தலத்தைக் குறிக்கும் முதுகுன்றம், பழமலை முதலிய தமிழ்ப் பெயர்களும், விருத்தாசலம் என்னும் வடமொழிப் பெயரும் முன்னாளில் இருந்து மறைந்த குன்றத்தைக் குறிக்கும்!


கொடுங்குன்றம்

பாண்டி நாட்டைச் சேர்ந்தது கொடுங் குன்றம். அதனைப் பெருநகர் என்றும் திருநகர் என்றும் திருஞான சம்பந்தர் பாடியிருப்பதால், அந்நாளில் அது மிகவும் பெருமை பெற்றிருந்ததாகத் தோற்றுகின்றது. தமிழ் நாட்டில் அழியாப் புகழ் பெற்று விளங்கும் பாரியின் பறம்பு நாட்டை அணி செய்தது அக்குன்றம். இன்று பிரான்மலை என்பது அதன் பெயராகும்.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment