பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 34                                                                 இதழ் -
நாள் : 18-12-2022                                                     நாள் : - - ௨௦௨௨
 
 
 
பெயர்ச்சொல்லின் வகைகள்
 
 
பொருட்பெயர்
     ஒரு பொருளுக்குப் பெயராகி வருவது பொருட்பெயர் ஆகும்.
 
     “ பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல் ”            
                                      - நன்னூல் நூற்பா. எண். 132
வகைகள்
பொருட்பெயரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
  • உயர்திணைப்பொருட்பெயர்
  • அஃறிணைப்பொருட்பெயர்
சான்று
  • உயர்திணைப் பொருட்பெயர்
    • கந்தன்
    • குமரன்
    • மலர்விழி
    • தமிழழகி
  • அஃறிணைப் பொருட்பெயர்
    • பசு
    • மயில்
    • மலை
    • காற்று
 
இடப்பெயர்
     இடத்தைக் குறிப்பது இடப்பெயர் ஆகும்.
சான்று
  • அரண்மனை
  • பள்ளி
  • சென்னை

காலப்பெயர்

     காலத்தைக் காட்டுவது காலப்பெயர் ஆகும். கண்ணிமைக்கும் நொடிப்பொழுது முதல் ஊழிக்காலம்வரை உள்ள எல்லாமே காலத்தைக் குறிக்கும் பெயர்கள்தான்.
சான்று
  • ஆடித்திங்கள்
  • இரவு
  • வெள்ளிக்கிழமை

சினைப்பெயர்
     சினை (சினை – உறுப்பு) என்பது ஒன்றின் உறுப்பைக் குறிப்பது. முழுமையான ஒன்றின் பகுதிகளைக் குறிக்கும் பெயர்கள் சினைப்பெயர்கள் ஆகும்.
சான்று
  • கை
  • தலை
  • இலை
  • பூ

பண்புப்பெயர் (அ) குணப்பெயர்
     பண்பை அல்லது குணத்தைக் காட்டுவது பண்புப்பெயர். பண்பாவது ஒருபொருள் தோன்றும் காலத்து உடன் தோன்றி அது அழியும் அளவும் நிற்பது. பண்புப்பெயர் நிறம், வடிவம், அளவு, சுவை, குணம் இவற்றின் அடிப்படையில் வரும்.
சான்று
  • அன்பு
  • வெண்மை
  • வட்டம்
  • இனிப்பு
 
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment