பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 169                                                                                    இதழ் - ௧௬௯
நாள் : 10 - 08 - 2025                                                                  நாள் : ௧0 - ௦௮ - ௨௦௨௫


பழமொழி அறிவோம்

பழமொழி – 168

' ஊசியைக் காந்தம் இழுக்கும், உத்தமனை சினேகம் இழுக்கும் '

விளக்கம்

   ஊசி போன்ற உலோகத்தை காந்தம் எவ்வாறு இழுக்குமோ அதுபோல உத்தமர்களுக்கு நல்ல நட்பு கிடைக்கும் என்பது  இப்பழமொழிக்கு விளக்கமாகும்.     

 ஊசி போன்ற உலோகத்தை காந்தம் எவ்வாறு இழுக்குமோ அதுபோல உத்தமர்களின் நற்குணங்களைக் கண்டு பலரும் அவர்களுடன் நட்பு கொள்ள விரும்புவர். நற்குணங்களைக் கொண்டவர்களிடம் அவர் தேடிச் செல்லாமலேயே நல்ல நட்பு தேடிவரும் என்பதைக் குறிக்கவே 'ஊசியைக் காந்தம் இழுக்கும், உத்தமனை சினேகம் இழுக்கும்'  என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment