இதழ் - 78 இதழ் - ௭௮
நாள் : 22-10-2023 நாள் : ௨௨-௧0-௨௦௨௩
சாரியை
சாரியை
- பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாகச் சார்ந்து இயைய வரும் உறுப்பு சாரியை ஆகும். பெரும்பாலும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும். சான்று
- நடந்தனன் = நட + த் + த் + அன் + அன்
- சொல்லில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் அன் என்பது சாரியை ஆகும். சாரியைக்குப் பொருள் இல்லை. சந்திவர வேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனைச் சாரியை என்று குறிப்பிட வேண்டும். சான்று
- தருகுவென் = தா (தரு ) + கு + வ் + என்
- இச்சொல்லில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் ‘கு’ என்பதே சாரியையாகும். அன் என்பது விகுதியாக வரும்போது ‘அன்’ என்பதே சாரியையாக வரும். ஆன், ஆள், ஆர் ஆகிய விகுதிகள் வரும்போது ‘அன்’ சாரியையாக வராது.
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment