பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 52                                                                                          இதழ் -
நாள் : 23-04-2023                                                                           நாள் : -0-௨௦௨௩
 
 
 
 
 
இருப்பு, இருக்கை
 
    இருப்பு, இருக்கை முதலிய சொற்களும் சிறுபான்மையாக ஊர்ப்பெயர்களில் காணப்படுகின்றன. தஞ்சை நாட்டில் புன்னை இருப்பு, வேட்டைக்காரன் இருப்பு முதலிய குடியிருப்புகள் உண்டு. தொண்டை நாட்டில் உள்ள ஓரிக்கை என்பதன் என்னும் ஊரின் பெயர் ஓரிர விருக்கை சிதைவென்று சொல்லப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் இருப்புக்கல் என்னும் ஊர் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
 
 
வாழ்வு, வாழ்க்கை
 
    வாழ்வு, வாழ்க்கை என்னும் சொற்களும் குடியிருப்பைக் குறிப்பனவாகும். பாண்டி நாட்டிலுள்ள பழனி மலைக்கு வழங்கும் பல பெயர்களில் சித்தன் வாழ்வு என்பதும் ஒன்று. தஞ்சை நாட்டில் பாபநாச வட்டத்தில் சித்தன் வாழூர் என்னும் ஊர் இருக்கிறது. இன்னும், எட்டி வாழ்க்கை முதலிய ஊர்ப் பெயர்களில் வாழ்க்கை அமைந்திருக்கக் காணலாம்.
 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 
 

No comments:

Post a Comment