இதழ் - 55 இதழ் - ௫௫
நாள் : 14-05-2023 நாள் : அ௪-0௫-௨௦௨௩
பழமொழி – 55
” ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் “
விளக்கம்
ஒருவன், ஒரு செயலைச் செய்யும் போது நிலையாகச் செய்யாமல் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைத்தாற் போல் செய்தால் அச்செயல் முழுமைபெறாது என்பது இப்பழமொழிக்குப் பொருளாகும்.
உண்மை விளக்கம்
” அயத்தில் ஒரு கால், செயத்தில் ஒரு கால் “
விளக்கம்
இங்கு அயம் என்றால் குதிரை என்றும் செயம் என்றால் பூமி என்றும் பொருள்.
ஒருவன் குதிரை மீது பயணம் செய்ய முடிவு செய்தால் குதிரையின் மீது ஏறிப்பயணம் செய்ய வேண்டும். அதைவிடுத்து குதிரையிலும் ஏறாமல் பூமியிலும் நிற்காமல் இரண்டிலும் காலை ஊன்றிக்கொண்டிருந்தால் இரண்டு செயல்களும் வீணாகும் என்பதையே ”அயத்தில் ஒரு கால், செயத்தில் ஒரு கால்” என்ற இப்பழமொழி நமக்கு பொருள் உணர்த்துகிறது.
இப்பழமொழி காலப்போக்கில் ”ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்“ என்று மருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment