பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 194                                                                                    இதழ் - ௧
நாள்  :  15 / 03 / 2026                                                                நாள்   :   / 0 / ௨௦௨


இலக்கணம் கற்போம்
 
வாகைப்படலம்

வாகைப்படலம்

பகைவரை வென்று அதற்கு அறிகுறியாக வாகை மாலையைச் சூடுவது வாகைத்திணை எனப்படும்.

வாகைத்திணை துறைகள் மொத்தம் – 32

1. வாகை அரவம்
போர்மறவர் வாகைப்பூச் சூடியும், வீரக்கழல் அணிந்தும் ஆரவாரிப்பது.

2. அரச வாகை
வாகை வேந்தனின் செங்கோல் சிறப்பை எடுத்துரைப்பது.

3. முரச வாகை
வாகை வேந்தனின் வெற்றி முரசைச் சிறப்பிப்பது.

4. மறக்களவழி
செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுவது.

5. களவேள்வி
வாகை அரசன் போர்க்களத்தில் வேள்வி செய்வது.

6. முன்தேர்க்குரவை
வெற்றிப்பெற்ற அரசனுடைய தேரின்முன் பேய் கூத்தாடுவது. (தும்பை.13)

7. பின்தேர்க்குரவை
வாகை அரசனின் தேரின் பின்னர் மறவர்களும் விறலியரும் நின்று 
     குரவைக் கூத்தினை ஆடுவது. (தும்பை.14)

8. பார்ப்பனவாகை
வேதம் உணர்ந்த பார்ப்பனனின் மேம்பாட்டைக் கொண்டாடுவது.

9. வாணிகவாகை
அறுவகைத் தொழிலினையும் சிறக்கச் செய்கின்ற வணிகர் தம் மேம்பாட்டைக் கூறுவது.

10. வேளாண்வாகை
வேளாளரைச் சிறப்பித்துக் கூறுவது.

இலக்கணம் தொடரும் . . .


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment