பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 120                                                                                     இதழ் - ௧
நாள் : 10- 08 - 2024                                                                    நாள் :  -  - ௨௦௨௪



உம்மைத்தொகை

  • இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை ஆகும். 
  • உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.

சான்று
  • இரவுபகல், தாய்தந்தை
     இத்தொடர்கள் இரவும் பகலும், தாயும் தந்தையும் என விரிந்து பொருள் தருகின்றன. இதில் சொற்களின் இடையிலும், இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது. இவ்வாறு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது உம்மைத்தொகை ஆகும்.

                                      எண்ணும்மை
  • ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எண்ணும்மை எனப்படும்.  
சான்று
  • பசுவும் கன்றும், அண்ணனும் தம்பியும்

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment