இதழ் - 97 இதழ் - ௯௭
நாள் : 03-03-2024 நாள் : 0௩-0௩-௨௦௨௪

தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
முக்தி | வீடுபேறு |
மிருகம் | விலங்கு |
யூகம் | நுண்ணறிவு |
வேதாந்தம் | மறை முடிவு. |
வைபவம் | கொண்டாட்டம், நிகழ்ச்சி |
- சமண சமயத்தில் பெண்களுக்கு முக்தி இல்லை.
- சமண சமயத்தில் பெண்களுக்கு வீடுபேறு இல்லை.
- நாய் நன்றியுள்ள மிருகம்.
- நாய் நன்றியுள்ள விலங்கு.
- ஒற்றர்களுக்கு யூக அறிவு அவசியம்.
- ஒற்றர்களுக்கு நுண்ணறிவு அவசியம்.
- சித்தாந்தத்தைப் போல் இல்லை வேதாந்தம்.
- சித்தாந்தத்தைப் போல் இல்லை மறைமுடிவு.
- குழந்தைகளுக்கு விருப்பமானது வைபவமே.
- குழந்தைகளுக்கு விருப்பமானது கொண்டாட்டமே.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment