இதழ் - 58 இதழ் - ௫௮
நாள் : 04-06-2023 நாள் : 0௪-0௬-௨௦௨௩ வடக்கும் தெற்கும்
சில ஊர்களின் பெயர்கள் அவை அமைந்திருக்கும் திசையைக் கொண்டு அறியமுடிகிறது. அவ்வாறே நான்கு திசைகளுள் வடக்கும் தெற்கும் ஆகிய இரு திசைகள் சில ஊர்ப்பெயர்களில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டுக்கு வடக்கேயுள்ள நாட்டை வடுகு என்று பண்டைத் தமிழர் அழைத்தனர். "வடதிசை மருகின் வடுகு வரம்பாக" என்று பழம்புலவர் பாடியுள்ளார்.
வடபாதி மங்கலம், வடஆர்காடு, வடசென்னை, வடமாவட்டங்கள், வடமதுரை, வடுகுப்பட்டி முதலிய ஊர்ப்பெயர்களும், இடப்பெயர்களும் வடக்குத் திசையால் உருவாகியுள்ளதைக் காணலாம்.
அதேபோல் தமிழகத்தின் தெற்குத் திசையில் அமைந்துள்ள பாண்டிநாடு, தென்னாடு என்று பெயர் பெற்றது. அந்நாட்டிலுள்ள தென்காசி, தென்திருப்பேரை முதலிய ஊர்கள் தெற்கே எழுந்தவை என்பது வெளிப்படை.
மேலும் தென் மாவட்டங்கள், தென்னமநல்லூர், தென்சென்னை, முக்கிய நகரங்களில் வழங்கப்படும் தென்பகுதிகள் அனைத்தும் தெற்குத் திசையில் அமைந்த காரணத்தினால் அவ்வாறு ஊர்ப்பெயர்களாக வழங்கப்படுவதை அறியலாம்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment